சொஃப்ட்வெர் என்பது என்ன? மென்பொருள் என்பது என்ன?
இந்த இரண்டு கேள்விகளும் நான் கேட்கவில்லை. என் தம்பி, நித்திஸ் என்னிடம் கேட்டான். நான்கு வயது பையன். அவனுடைய அசிரியர் தமிழில் எதாவது ஒரு பாரதியார் கவிதையை கணினியில் டைப் செய்து வரசொல்லியிருந்தார். எப்பொழுதும்போல் என்னிடம் வந்து உதவி கேட்டான்.
எனக்கோ கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும் என்று தெரியவே தெரியாது. நான் ஒரு உலகத்தில் இருந்தேன், தமிழ் ஒரு உலகத்தில் இருந்தது.
இனையத்தில், கூகளில் "type tamil online" என்று தேடியபோதும் ஒரு தட்டச்சு கூட கிடைக்கவில்லை.
சில வாரங்கள் ஓடின, என் தமிழாசிரியர் என்னை தமிழில், தமிழவேள் கோ. சாரங்கபாணியை பற்றி தகவல்கலை சேகரித்து வர கூறினார்.
இந்த தடவை உமறு புலவர் தமிழ் மொழி கல்வி நிலையத்தில் பயின்று வறும் நண்பர்களிடம் கேட்டேன்.
கிடைத்ததா ஒரு நல்ல தமிழ் தட்டச்சு மென்பொருள்?
பல பல மென்பொருள்களின் தகவல்கள் கிடைத்தன்!
என்னைப்போல் தமிழ் மென்பொருள் தேடி கஸ்டப்பட தேவையில்லை, ஒவ்வோரு வாரமும் தமிழ் தட்டச்சு மென்பொருள்களின் தகவல்களை ப்லோக் செய்யவிருக்கிறேன்!!!
-ராமு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment